மகளிர்மணி

சானிடரி நாப்கின் : ஒரு  தீர்வு..

இளம்  வயது  பெண்களுக்கு   அந்த  மூன்று  நாட்களில் பெரும் அவஸ்தைதான்.

பிஸ்மி பரிணாமன்

இளம்  வயது  பெண்களுக்கு   அந்த  மூன்று  நாட்களில் பெரும் அவஸ்தைதான். இப்போது  சானிடரி  நாப்கின்கள் வந்து விட்டதால்,  அந்த அவஸ்தையிலிருந்து கொஞ்சம்   ஆசுவாசம் கிடைத்தாலும், உபயோகித்த  சானிடரி நாப்கின்களை  வெளியே  களைவதில்  ஏகப்பட்ட  சிக்கல்... பெரிய தலைவலி,   அசெüகரியம்  கண்டிப்பாக உண்டு. 

காரணம்,   இந்த நாப்கின்கள்  மக்கிப் போகும்  தன்மை  கொண்டதல்ல.  இவற்றை  நெருப்பிலிட்டு எரித்தால் மட்டுமே  அழிக்க முடியும். இந்த  நாப்கின்களை எரிப்பதாலும்,  அங்கங்கே தூக்கி   எறியப்படும் நாப்கின்களாலும்  சுற்றுப்புற சூழ்நிலை  பாதிக்கப்படும் அபாயத்திற்கு ஆரம்பம்  சொல்லியாகிவிட்டது. விரைவில்  இந்தப்  பிரச்னை  பூதாகரமாக புறப்படும் என்பதில் சந்தேகமில்லை. இந்தப்  பிரச்சினைக்கு  ஒரு முடிவினைக் கண்டு பிடித்திருக்கிறார்  ஐஸ்வர்யா. பி. டெக் பட்டதாரி. இது குறித்து அவர் கூறியது:

""ஒன்பதாம் வகுப்பு  படிக்கும் போதே இந்த சானிடரி நாப்கின்களைக் களைவதில் உள்ள பிரச்னைகள் பற்றி அனுபவ ரீதியாகப் புரிந்து கொண்டேன். இதற்கு ஒரு  செலவு குறைந்த உபாயம் கண்டுபிடிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்.  முதலில்  சின்னதாக ஒரு கருவியை இதற்காக தயார் செய்தேன்.  இந்தக் கருவி மூலம் சானிடரி  நாப்கின்னிலுள்ள  பிளாஸ்டிக் மற்றும்  பஞ்சைத் தனித்தனியாப் பிரித்து எடுத்து  சுத்தம் செய்து  பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம்.

 இந்தக்  கருவியின்  செயல்படும்  திறமையைக்  கூட்ட, நான் பி.டெக்  படிக்கும் போது, முழு மூச்சாக ஈடுபட்டேன். வெற்றி கிடைத்திருக்கிறது. பேடன்ட்டுக்காக மனு செய்துள்ளேன். இதற்கிடையில், இந்தக் கண்டு பிடிப்பிற்காக, மசஐஇஉஊ  விருது  எனக்கு  சென்ற மாதம்  கிடைத்திருக்கிறது.

இந்தக்  கருவி,  காபி தயாரிக்கும் மெஷினைவிடச் சிறியது. இந்த கருவியினுள்  காப்பர் ஹைடிராக்சைட் நான்கு பங்கும், அமோனியம் ஹைடிராக்சைட் மூன்று பங்கும் கலந்த காப்பரோமினியம் ஹைடிராக்சைட் கரைசல் இருக்கும். நாப்கினை  இந்த மெஷினுக்குள் போட்டதும்,  உள்ளே உள்ள மோட்டார்  நாப்கினை  நாறு நாராகக் கிழிக்கும்.  பிறகு அந்த  நாறுகள்  ரசாயனக் கரைசலில்  வந்து விழும். பஞ்சு  அந்தக் கரைசலில்  கரைந்து போக, மிச்சம் இருப்பது நாப்கினில்  இருக்கும் செயற்கை  இழைகள் மட்டும்தான். அவை கரைசலினால்   சுத்தமாக்கப்பட்டு வெளியே தள்ளப்படும். அந்த இழைகளை  பிளாஸ்டிக் பைகள் ன்ழ்ஹண்ந்ஹப்  செய்யலாம். இதில் சுகாதாரக் கேடு  எதுவும் கிடையாது.... குடிநீருக்காக  மெஷின் வாங்குவது போல், இந்த மாதிரி மெஷினை வீடுகளில்  வைத்துக் கொண்டால் உபயோகித்த நாப்கின்களை  களைவதில் உள்ள சிரமங்கள், அசெüகரியங்களைத் தவிர்க்கலாம்'' என்று சொல்லும் ஐஸ்வர்யா  கேரளத்தைச் சேர்ந்தவர்.  

பெண்ணுக்குத்தானே  பெண்கள் படும் கஷ்டங்கள் தெரியும்..    ஐஸ்வர்யாவின்  சகோதரர் கிருஷ்ண காந்த்திற்கு , விலை குறைந்த வேகத்தடையைக்  கண்டு பிடித்தமைக்கு  விருது கிடைத்துள்ளது.  சகோதரருக்குக்  கிடைத்த  விருது , ஐஸ்வர்யாவை   சானிடரி  நாப்கின்களை  மறுசுழற்ச்சி   செய்யும்  மெஷினை  உருவாக்கும்  தூண்டுகோலாக  இருந்ததாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

SCROLL FOR NEXT